உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வைகை அணை தரைப் பாலத்தில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை

வைகை அணை தரைப் பாலத்தில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை

ஆண்டிபட்டி: வைகை அணையில் திறக்கப்பட்டுள்ள நீர் தரைப் பாலத்தை மூழ்கடித்து செல்வதால் சுற்றுலாப் பயணிகள் தரைப்பாலம் வழியாக செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.வைகை பூர்வீக பாசன பகுதி 3ல் உள்ள ராமநாதபுரம் மாவட்ட கண்மாய்களுக்காக வைகை அணையில் இருந்து நேற்று காலை 10:15 மணிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. திறக்கப்பட்ட நீர் 11:30 மணிக்கு வினாடிக்கு 3000 கனஅடியாக உயர்த்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அணையின் வலது, இடது கரைகளை இணைக்கும் தரைப்பாலம் நீரில் மூழ்கியது.தற்போது கோடை விடுமுறையால் வைகை அணைக்கு சுற்றுலா பயணிகள் கூடுதலாக வந்து செல்கின்றனர். இதனைத் தொடர்ந்து தரைப் பாலத்தில் இருபுறமும் நீர் பாசன துறையினர் தடுப்பு வேலிகள் அமைத்து சுற்றுலாப் பயணிகள் செல்ல தற்காலிக தடை விதித்துள்ளனர்.வைகை அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரிய பாலத்தின் வழியாக சென்று வலது, இடது கரை பூங்காக்களை பார்வையிடலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ