| ADDED : ஜூன் 21, 2024 04:51 AM
தேனி: தேனி தப்புக்குண்டு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் அலைபேசி சிக்னல் கிடைக்காததால் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.இக் கால்நடை மருத்துவ பல்கலையில் 19 துறைகள் உள்ளன. 200 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பேராசிரியர்கள், இணை, துணைப் பேராசிரியர்கள், விரிவிரையாளர்கள் என கற்பித்தல் பணியில் 52 பேர், அலுவலக பணியாளர்கள், என 400 பேர் பணிபுரிகின்றனர்.இப்பல்கலை வளாகத்தில் அலைபேசி சிக்னல் கிடைப்பது இல்லை.இதனால் பேராசிரியர்கள், விரிவுரையார்கள் டவர் சிக்னல் கிடைப்பதற்காக வகுப்பறைகளை விட்டு வெளியே வந்து பேசும் அவலம் நீடிக்கிறது. பல்கலைக்கு முக்கிய தகவல் பரிமாற்றம் தடைபடுகிறது. அலுவலர்கள் கூறுகையில், தற்போது ஏர்டெல் டவர் அமைக்க நிறுவனத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஆனால் காலதாமதம் ஏற்படுகிறது. மாவட்ட நிர்வாகம் அலைபேசி டவர் அமைத்து, தகவல் தொலை தொடர்புக்கு உதவிட வேண்டும்.',என்றனர்.