ஒயர் திருடிய இருவர் கைது
போடி: தேவாரம் அருகே அழகர்நாயக்கன்பட்டியை சேர்ந்த அய்யப்பன் 44.இவரது குச்சனூர் ரோட்டில் உள்ள தோட்டத்தில் போடி புதுக்காலனியை சேர்ந்த ஆதித்யா 19. மற்றும் ஒரு சிறுவன் சேர்ந்து ரூ.6 ஆயிரம் மதிப்பு உள்ள 40 மீட்டர் மின் ஒயரை திருடி டூவீலரில் தப்பி ஓட முயன்றனர். இருவரையும் அய்யப்பன் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார். போலீசார் ஆதித்யா உட்பட இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.