உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வாலிபர் கொலை வழக்கில் இருவர் கைது

வாலிபர் கொலை வழக்கில் இருவர் கைது

பெரியகுளம்: இறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடித்த தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இருவர் கைதான நிலையில், மேலும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.பெரியகுளம் வைத்தியநாதபுரம் வெற்றிலைமடம் தெரு சூரியபிரகாஷ் 24. இவரது தாத்தா முன்னாள் ராணுவ வீரர் மனோகரன். மே 7ல் இறந்தார். இறுதி ஊர்வலத்தில் சூரியபிரகாஷ் வெடி வெடித்தார். ஊர்வலத்தில் பங்கேற்ற உறவினர் ராஜாமணி காலில் பட்டது. ராஜாமணியின் மகன் அஜித்குமார் 30. அவரது நண்பர்கள் கார்த்திக் 38. சரவணன் 27. செல்வம் 37, ஆகிய நால்வர் சூரிய பிரகாஷை அவதூறாக பேசினர். இருதரப்பினர் இடையே அடிதடியும், தகராறும் ஏற்பட்டது. சூரியபிரகாஷின் தம்பி அருண்குமார் 21, 'ஏன் எனது அண்ணணை தாக்கினீர்கள்' என, கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த அஜித்குமார், சரவணன், செல்வம் ஆகியோர் அருண்குமாரை பிடித்துக் கொண்டனர். கார்த்திக் அரிவாளால் அருண்குமாரை வெட்டினார்.ரத்த வெள்ளத்தில் தப்பி ஓடிய அருண்குமார் புதரில் விழுந்து இறந்தார். வடகரை இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன், நான்கு பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்தார். அஜித்குமார், கார்த்திக் கைது செய்த நிலையில், நேற்று முன்தினம் சரவணன், செல்வம் கைது செய்யப்பட்டனர்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி