உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / காட்டுப்பன்றி வேட்டையாடிய இருவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

காட்டுப்பன்றி வேட்டையாடிய இருவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

கம்பம், : கம்பம் வனப்பகுதியில் காட்டுப் பன்றியை வேட்டையாடிய கூடலூரை சேர்ந்த இருவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.கம்பம் வனப்பகுதியில் காட்டு பன்றிகள் மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களை திண்பதற்காக வரும் பன்றிகளை கும்பல் வேட்டையாடி இறைச்சியை கிராமங்களில் விற்கின்றனர். நேற்று கூடலூர் வடக்கு போலீசார் கம்பம் புதுக்குளம் பகுதியில் ரோந்து சென்ற போது, இருவர் சாக்கு பையுடன் வந்தனர். சந்தேகமடைந்த போலீசார் அவர்களிடம் இருந்த சாக்கு பையை சோதனை செய்த போது, சாக்கு பையில் காட்டு பன்றி ஒன்றை வேட்டையாடி கொண்டு வந்தது தெரிந்தது.இதையடுத்து விசாரணையில் கூடலூரை சேர்ந்த சுசீந்திரன் 41, முத்துப்பாண்டி 32 என்பது தெரிய வந்தது. பிடிபட்ட இருவரையும் கம்பம் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். ரேஞ்சர் பிச்சை மணி இருவருக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தார். அபராத தொகையை செலுத்தியதால் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ