மேலும் செய்திகள்
வைகை அணையில் பாசனத்திற்கு நீர் திறப்பு
20-Feb-2025
ஆண்டிபட்டி:மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரின் அளவு வினாடிக்கு 200 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.இம்மாவட்டங்களின் 2ம் போக பாசனத்திற்கு கால்வாய் வழியாக டிசம்பர் 18 முதல் வைகை அணையில் இருந்து நீர் வெளியேறுகிறது. முறைப்பாசன அடிப்படையில் பிப்ரவரி 27 முதல் வினாடிக்கு 650 கன அடியாக இருந்த நீர் வெளியேற்றம் நேற்று வினாடிக்கு 200 கன அடியாக குறைக்கப்பட்டது.மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 72 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நேற்று அணை நீர்மட்டம் 60.60 அடியாக இருந்தது அணை மொத்த உயரம் 71 அடி. அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 164 கன அடியாக இருந்தது.
20-Feb-2025