| ADDED : ஆக 09, 2024 12:38 AM
தேனி: தாலுகா அலுவலகங்களில் நடந்த கணொளி பயிற்சியில்'டிஜிட்டல் வேளாண் சர்வே பணிகளை தீவிரப்படுத்தமாறு' வி.ஏ.ஓ.,க்களுக்கு அறிவுறுத்தப்பட்டள்ளது.தமிழகத்தில் உள்ள அனைத்து சர்வே நிலங்களின் நிலையை அலைபேசி செயலியில் பதிவேற்றும் பணி வி.ஏ.ஓ.,க்கள் மூலம் நடந்து வருகிறது. இதற்காக தனி செயலி உருவாக்கப்பட்டு, அதனை வி.ஏ.ஓ.,க்கள் பயன்படுத்தும் வகையில் பயனாளர் முகவரி, பாஸ்வேர்ட்டு வழங்கப்பட்டுள்ளது.இந்த பணி கடந்த 4 மாதத்திற்கு மேலாக நடந்து வருகிறது. வேளாண் துறை சார்பில் தாலுகா அலுவலகங்களில் கணொளி பயிற்சி நடந்தது.இதில் வி.ஏ.ஓ.,க்களும் பங்கேற்றனர். எந்த பகுதிகளில் சர்வே பணி தொய்வாக உள்ளதோ, அப்பகுதிகளில் பணியை தீவிரபடுத்த அறிவுறுத்தப்பட்டது.வி.ஏ.ஓ.,க்கள் கூறுகையில், அரசு வழங்கிய செயலியில் சர்வே எண்ணில் சப்டிவிஷன் வாரியாக, விவசாய நிலம், தரிசு நிலம், வீட்டு மனை என்பதை புகைப்படம் எடுத்து பதிவு செய்ய வேண்டும்.இணை வசதி இல்லாத இடங்களில் பதிவேற்றுவது சிரமமாக உள்ளது. இந்த செயலியை பயன்படுத்த இணைய வசதியுடன் தனி அலைபேசி அல்லது 'டேப்' வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.