உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வி.சி., மாவட்ட செயற்குழு கூட்டம்

வி.சி., மாவட்ட செயற்குழு கூட்டம்

தேனி : பெரியகுளத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் வி.சி., மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ரபீக் தலைமை வகித்தார். பெரியகுளம் ஒன்றிய செயலாளர் ஆண்டி, நகரச் செயலாளர் ஜோதிமுருகன், சட்டசபை தொகுதி துணை செயலாளர் ஆண்டவர் முன்னிலை வகித்தனர். தேனி, திண்டுக்கல் மண்டல செயலாளர் தமிழ்வாணன், முன்னாள் மாவட்ட செயலாளர் நாகரத்தினம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் வயநாட்டில் உயரிழந்த மக்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. காயிதே மில்லத் நகரில் உள்ள பட்டாளம்மன் கோயில் தெருவில் கழிவுநீர் தெருவில் செல்வதை தடுக்க தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ