உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் கால்வாய் சீரமைப்பு

வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் கால்வாய் சீரமைப்பு

தேனி : வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் கர்ப்பகிரஹ அபிஷேக நீர், எண்ணெய் காப்பு நீர் செல்லும் வாய்க்கால் சீரமைப்புப் பணிகள் துவங்கி உள்ளன.இக்கோயில் அம்மன் சுயம்புவாக வீற்றிருப்பதால் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும், வார இறுதி நாட்கள், ஆடி மாத பூஜைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். சித்திரை திருவிழா, ஆடி மாத பூஜைகளில் மஞ்சள் நீர், எண்ணெய் காப்பு, பால் அபிஷேகம் அதிகளவில் நடைபெறும். இதில் வெளியாகும் அபிஷேகம் நீர், பால், எண்ணெய் காப்பு நீர் வெளியேறி, கோயில் பிரகாரத்தில் உள்ள தண்ணீர் தொட்டி அருகே வாய்க்காலில் சேரும். பின் வாய்க்கால் வழியாக பேரூராட்சி சாக்கடையில் சேர்ந்து விடும். கோயில் வளாகத்தில் அபிஷேக நீர் சீராக செல்ல கோயில் நிர்வாகம் சார்பில் ரூ.12 லட்சம் செலவில் வாய்க்கால் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. விரைவில் இப்பணிகள் முடிந்தால் அபிஷேக நீர் வெளியேறுவதில் உள்ள சிரமம் குறையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ