உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கல்வி மாவட்ட அளவில் விகாசா மெட்ரிக் பள்ளி சாதனை

கல்வி மாவட்ட அளவில் விகாசா மெட்ரிக் பள்ளி சாதனை

உத்தம பாளையம்: பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில் உத்தமபாளையம் கல்வி மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பெற்று விகாசா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.இப்பள்ளி மாணவி பரணி 600 க்கு 578 மதிப்பெண் பெற்று கல்வி மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பெற்றார். மேலும் நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றார். மாணவி தனுஷா 600 க்கு 578 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தை பகிர்ந்து கொண்டார். பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை தாளாளர் இந்திரா, செயலர் உதயகுமார், நிர்வாக அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, முதல்வர்கள் குமரேசன், அவிலா தெரசா ஆகியோர் பாராட்டி பரிசுகள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி