காட்டுமாடு முட்டி தொழிலாளி பலி
உத்தமபாளையம்: உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டி தென்னந்தோப்பில் வேலை செய்து கொண்டிருந்த கூலி தொழிலாளி முருகன் 55, என்பவர் காட்டுமாடு முட்டி பலியானார்.ராயப்பன்பட்டி குறிஞ்சி தெரு முருகன். இவர் இங்குள்ள அந்தோணி என்பவரின் தென்னந்தோப்பில் நேற்று காலை வேலை செய்து கொண்டிருந்துள்ளார். வனப்பகுதிக்குள் இருந்து வந்த காட்டுமாடு ஒன்று முருகனை எதிர்பாராத விதமாக முட்டி தூக்கி எறிந்துள்ளது.இதனால் முருகன் அதே இடத்தில் பலியானார். அங்கிருந்து பக்கத்து தோட்டத்திற்கு சென்ற காட்டு மாடு , அங்கு - வேலை செய்து கொண்டிருந்த வேல்மணி என்ற பெண்ணை முட்டியது.லேசான காயத்துடன் வேல்மணி உயிர் தப்பினார். தகவலின் பேரில் ராயப்பன்பட்டி போலீசார் , வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.காட்டு மாடு முட்டி பலியான முருகன் மனைவி கனகரத்தினத்தை சந்தித்த எம்.எல்.ஏ, ராமகிருஷ்ணன் ஈமச்சடங்குகளுக்கென அரசு சார்பில் ரூ.50 ஆயிரத்திற்கான காசோலை வழங்கி ஆறுதல் கூறினார். மேலும் அரசின் நிவாரண தொகையாக ரூ.10 லட்சமும்,மகனுக்கு அரசு வேலை வழங்க வனத்துறை அமைச்சகம் சம்மதித்துள்ளதாகவும் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.