உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வீட்டில் துாங்கிய தொழிலாளி உயிரிழப்பு

வீட்டில் துாங்கிய தொழிலாளி உயிரிழப்பு

மூணாறு : மூணாறு அருகே வட்டவடையில் மரத்தடிகளை ஏற்றும் தொழிலாளி வீட்டில் இறந்த நிலையில் கிடந்தார்.வட்டவடை கிராமத்தைச் சேர்ந்தவர் மரத்தடிகளை லாரியில் ஏற்றும் தொழிலாளி ஜெயகணேஷ் 40. இவர், நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் உறங்கியவர் காலையில் எழுந்திருக்கவில்லை. அவரது மனைவி எழுப்பிய போது அசைவற்ற நிலையில் கிடந்தார். அவரை, அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில் ஜெயகணேஷ் இறந்து விட்டதாக தெரிய வந்தது. தேவிகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி