உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / உலக தாய்ப்பால் வார விழா வினாடி - வினா போட்டி என்.எஸ். மெட்ரிக் பள்ளி அணி வெற்றி

உலக தாய்ப்பால் வார விழா வினாடி - வினா போட்டி என்.எஸ். மெட்ரிக் பள்ளி அணி வெற்றி

தேனி, தேனி மருத்துவக் கல்லுாரியில் நடந்த உலக தாய்ப்பால் வார விழா வினாடி - வினா போட்டியில் முத்துத்தேவன்பட்டிஎன். எஸ்., மெட்ரிக் பள்ளி அணி வெற்றி பெற்றனர்.இம் மருத்துவக் கல்லுாரியின் குழந்தைகள் நலத்துறை, இந்திய குழந்தைகள் நல மருத்துவர்கள் சங்க தேனி கிளை சார்பில் வினாடி வினா போட்டி நடந்தது. தேனி கிளை தலைவர் டாக்டர் அன்புராஜன், செயலாளர் டாக்டர் ரெகுபதி, பொருளாளர் டாக்டர் முத்துப்பாண்டி, செயற்குழு உறுப்பினர் டாக்டர் செல்வக்குமார் இணைந்து போட்டியை துவக்கினர். போட்டியில் முத்துத்தேவன்பட்டி வேலம்மாள் சி.பி.எஸ்.இ., பப்ளிக் பள்ளி, நாடார் சரஸ்வதி பப்ளிக் பள்ளி, தேனி கம்மவார் சங்கம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, முத்துத்தேவன்பட்டி தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கொடுவிலார்பட்டி கம்மவார் சங்கம் சி.பி.எஸ்.இ., பப்ளிக் பள்ளி,மாணவ, மாணவிகள் 5 அணிகளாக பங்கேற்றன. இதில் உலக தாய்ப்பால் வார விழா குறித்து 25 வினாக்கள் கேட்கப்பட்டன. இதில் அதிக புள்ளிகள் பெற்று முத்துத்தேவன்பட்டி என்.எஸ்., மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு மாணவிகள் முதலிடம் பெற்றனர். இவர்களுக்கு உதவி பேராசிரியைகள் டாக்டர் வித்யாதேவி, டாக்டர் வசந்தமலர் கேடயம், சான்றிதழ் வழங்கினர். நாடார் சரஸ்வதி பப்ளிக் பள்ளி அணி 2ம் இடம் பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை