உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / உலக புகையிலை ஒழிப்பு தினம்

உலக புகையிலை ஒழிப்பு தினம்

கம்பம்: காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக புகையிலை ஒழிப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.ஒவ்வொரு ஆண்டும் மே 31ம் தேதி உலக புகையிலை ஒழிப்பு தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. நேற்று காலை காமயகவுண்டன்பட்டியில் உலக புகையிலை ஒழிப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. நான் ஒரு - போதும் புகை பிடிக்கவோ அல்லது புகையிலை பொருட்களை யாதொரு வடிவிலும்உட் கொள்ள மாட்டேன் என்றும், என்னுடைய உறவினர், நண்பர்களை புகை பிடிக்கவோ புகையிலை பொருள்களை பயன்படுத்தவோ ஊக்குவிக்கவோ மாட்டேன் என்றும் என்றும் டாக்டர்கள் தலைமையில் பொதுமக்கள் மற்றும் பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.டாக்டர்கள் முருகானந்தம், சிராசுதீன், மருந்தாளுனர் பசும்பொன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை