108 ஆம்புலன்ஸ் சேவை வேலை வாய்ப்பு முகாம் செப்.6ல் நடக்கிறது
தேனி : தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் செப்.6ல் காலை 10:00 மணிக்கு 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மருத்துவ உதவியாளர்கள், டிரைவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடக்க உள்ளது. பணிநாடுவோர் இதில் பங்கேற்று பயனடையலாம்.'' என, மேலாளர் ரத்தினவேல் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: டிரைவர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, நேர்முக தேர்வு அன்று 24 வயதிற்கு மேலும், 35 வயதிற்கு கீழும் இருப்பது அவசியம். உயரம் 162.5 செ.மீ.,குறையாமல் இருக்க வேண்டும். இலகுரக வாகன டிரைவிங் லைசென்ஸ் பெற்று 3 ஆண்டுகள் பணி அனுபவம், Badge வாகன உரிமம் பெற்றவர்கள் ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேணடும். அவசர மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு பி.எஸ்சி., நர்சிங், ஜி.என்.எம்., ஏ.என்.எம்., டி.எம்.எல்.டி., அல்லது அறிவியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். வயது 19 முதல் 30க்குள் இருக்க வேண்டும். ஷிப்ட் முறையில் பணியாற்ற வேண்டும். எழுத்துத்தேர்வு, உடற்கூறியியல் முதலுதவி மருத்துவ நேர்காணல், மனித வளத்துறை நேர்காணல் என மூன்று கட்டங்களாக தேர்வு நடத்தப்படும். விண்ணப்பதாரர்கள், டிரைவிங் லைசென்ஸ், கல்வி சான்றிதழ்களுடன் பங்கேற்க வேண்டும்.தேர்வு செய்யப்படும் டிரைவர்களுக்கு 10 நாட்கள் வகுப்பறை பயிற்சியும், மருத்துவ உதவியாளர்களுக்கு 50 நாட்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும்.கூடுதல் விபரங்களுக்கு 044 - 288 880 60 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.