உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  சிறப்பு முகாமில் 11 ஆயிரம் மனுக்கள்

 சிறப்பு முகாமில் 11 ஆயிரம் மனுக்கள்

தேனி: தமிழகத்தில் டிச.19ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள், 18 வயது உடையவர்கள் புதிதாக பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்ற, பெயர் திருத்தங்களுக்கு விண்ணப்பிக்க ஓட்டுச் சாவடி மையங்களில் டிச.27, 28, ஜன.3, 4ல் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மாவட்டத்தில் நடந்த முகாம்களில் டிச.27ல் புதிதாக பெயர் சேர்க்க 4816 பேர், நீக்க 74, திருத்தங்கள் செய்ய 1045 பேர் என மொத்தம் 5935 பேர் விண்ணப்பித்து இருந்தனர். நேற்று (டிச.28ல்) பெயர் சேர்க்க 4013 பேர், நீக்க 69 பேர், திருத்தம் செய்ய 1079 பேர் என, மொத்தம் 5161 பேர் விண்ணப்பித்து இருந்தனர். மொத்தம் 11,096 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ