உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மறியல் செய்த 115 பேர் கைது

மறியல் செய்த 115 பேர் கைது

ஆண்டிபட்டி:மத்திய அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்து ஆண்டிபட்டியில் இந்தியன் வங்கி முன்பு மறியல் செய்த 115 தொழிற்சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வலியுறுத்தல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆண்டிபட்டியில் தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டம் செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி., டி.யு.சி.சி., தொழிற்சங்கங்களை சேர்ந்த 70 பெண்கள் உட்பட 115 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்திருந்தனர். கைது செய்யப்பட்ட தொழிற் சங்கத்தினருக்கு மதிய உணவு வழங்குவதில் தாமதமானதால் திருமண மண்டபத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். மதிய உணவுக்கு மதியம் 3:30 மணிக்கு விடுதலை செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை