உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / 121 கிலோ குட்கா பறிமுதல்: 3 பேர் கைது

121 கிலோ குட்கா பறிமுதல்: 3 பேர் கைது

கம்பம்: கம்பம் வடக்கு எஸ்.ஐ. நாகராசன் தலைமையில் போலீசார் காமயகவுண்டன்பட்டி ரோட்டில் ரோந்து சென்ற போது, ஏழரசு களம் அருகே சாக்கு பையுடன் நின்றிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் வைத்திருந்த பையில் 13 கிலோ புகையிலை பொருட்கள் இருந்ததை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கம்பத்தை சேர்ந்த முகமது சேட் 40, குள்ளப்பகவுண்டன் பட்டியை சேர்ந்த ஈஸ்வரன் 50 ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதே பகுதியில் நின்றிருந்த ஈஸ்வரனின் சகோதரர் குணசேகரன் 47 என்பவர் வைத்திருந்த பகுதியில் 108 கிலோ புகையிலை பொருட்கள் கண்டுபிடித்து பறிமுதல் செய்து குணசேகரனும் கைது செய்யப்பட்டார். கம்பம் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை