உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  சத்திரம், புல்மேடு வழியாக சபரிமலை சென்ற 1.31 லட்சம் ஐயப்ப பக்தர்கள்; மண்டல காலத்தில் எண்ணிக்கை அதிகரிப்பு

 சத்திரம், புல்மேடு வழியாக சபரிமலை சென்ற 1.31 லட்சம் ஐயப்ப பக்தர்கள்; மண்டல காலத்தில் எண்ணிக்கை அதிகரிப்பு

மூணாறு: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சத்திரம், புல்மேடு காட்டுப்பாதையில் மண்டல காலத்தில் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 209 ஐய்யப்ப பக்தர்கள் சபரிமலை சன்னிதானத்துக்கு சென்றுள்ளனர். சத்திரம், புல்மேடு வழியாக பராம்பரிய காட்டுப் பாதை வழியாகவும் சபரிமலை சன்னிதானத்துக்கு செல்லலாம். அந்த வழியை கடந்த ஆண்டுகளை விட தற்போது பக்தர்கள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். சபரிமலை மண்டல காலம் துவங்கிய 41 நாட்களில் சத்திரம் புல்மேடு வழியாக ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 209 ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்றுள்ளனர். இதே கால அளவில் கடந்தாண்டு 76 ஆயிரம் 400 பக்தர்கள் சென்றனர். நிலக்கல்லில் 'ஸ்பாட் புக்கிங்' 5 ஆயிரமாக குறைக்ககப்பட்டதால், சத்திரம், புல்மேடு பாதையை பயன்படுத்தும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாளை மகர கால பூஜைக்காக நடை திறக்கப்பட்ட பிறகு காட்டுப்பாதையை பயன்படுத்தும் பக்தர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சபரிமலையில் இருந்து புல்மேடு வழியாக சத்திரத்திற்கு டிச., 27 வரை 1540 பக்தர்கள் மட்டும் தரிசனம் முடித்து திரும்பி வந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை