ரோடு மறியல் 15 பேர் கைது
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி தாலுகா, ராமலிங்காபுரத்தைச் சேர்ந்த பாண்டியராஜன் 41, இரு நாட்களுக்கு முன் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவரது உறவினர்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர். போலீசார் ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த சுருளிமுருகன் 40, கார்த்திக் 25, குமார் 35, சுப்பிரமணி 59, முத்துமணி 53, சந்திரசேகர் 33, ராஜசேகர் 41 உட்பட 15 பேரை கைது செய்தனர்.