கஞ்சா விற்ற 15 வயது சிறுவன் கைது
தேனி: தேனி போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி தலைமையிலான போலீசார் டொம்புச்சேரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக சென்ற 15 வயது சிறுவனை விசாரித்தனர். அச்சிறுவன் கொண்டு சென்ற பார்சலை சோதனையிட்டனர். அதில் ரூ.15 ஆயிரம் மதிப்பிலான ஒரு கிலோ 100 கிராம் எடையுள்ள கஞ்சா இருந்தது. விற்பனைக்கு கொண்டு செல்வதாக சிறுவன் போலீசாரிடம் கூறினார். சிறுவனை கைது செய்து மதுரையில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பினர்.