மேலும் செய்திகள்
கஞ்சா விற்பனை வாலிபர் கைது
15-Mar-2025
கூடலுார்: கருநாக்கமுத்தன்பட்டியில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து கூடலுார் வடக்கு எஸ்.ஐ., தீபக் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர்.சுடுகாட்டுக்கு அருகில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நடந்து சென்றவர்களை சோதனை செய்தபோது அவர்களிடம் 1.200 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கருநாக்கமுத்தன்பட்டியைச் சேர்ந்த அபிஷேக் 25, மகேஷ் 25, ஆகிய 2 பேரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்புடைய மதுரையைச் சேர்ந்த சஞ்சீவ்குமார், கூடலுாரைச் சேர்ந்த சுந்தரபாண்டியன் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.
15-Mar-2025