புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் 2 பேர் கைது
தேனி; தேனி அல்லிநகரம் நடுத்தெரு நாகராஜ் 56. இவரது இடத்தில் உள்ள பொருட்களை சேதப்படுத்தியதான புகாரில் குன்னுாரை சேர்ந்த இளையராஜாஉட்பட 11 பேர் மீது தேனி போலீசார் வழக்குப் பதிந்தனர். குன்னுார் இளையராஜா 43. இவருக்கும் தேனி வழக்கறிஞர் சந்தானகிருஷ்ணன், முல்லைநகர் பாலசுந்தர்ராஜ், ஆனந்தன், அரணமனைப்புதுார் நாகேந்திரனுக்கும் பஞ்சமி நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் தையல் மிஷின்களை சேதப் படுத்தி, கொலை மிரட்டல் விடுத்ததாக இளையராஜா புகாரில் வழக்கறிஞர் சந்தானகிருஷ்ணன், பாலசுந்தராஜ் உட்பட 10 பேர் மீது தேனி எஸ்.ஐ., இளங்குமரன் வழக்குப்பதிந்து விசாரித்தார். இந்நிலையில் புதிய தமிழகம் கட்சியின் பாலசுந்தர்ராஜ், இளையராஜா ஆகியஇருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.