தேனியில் கூடுதலாக சேர்ந்த 20 டன் குப்பை
தேனி : தேனி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த நான்கு நாட்களில் 20 டன் குப்பை அதிகரித்ததாக சுகாதாரப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் கூறியதாவது: தேனி நகராட்சி 33 வார்டுகளில் தினமும் 33 முதல் 34 டன் வரை குப்பை சேகரமாகும். ஆயுத பூஜை, விஜயதசமி நாட்களில் கூடுதலாக தினமும் 6முதல் 10 டன் வரை குப்பை அதிகரித்தது. கடந்த நான்கு நாட்களில் மட்டும் 20 டன் அதிகரித்தது. அவை பணியாளர்கள் மூலம் அகற்றப்பட்டது. மற்ற பகுதிகளில் உள்ள குப்பை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் குப்பையை பொது இடங்களில் வீசுவதை தவிர்க்க வேண்டும் என்றனர்.