உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வில் 2135 பேர் பங்கேற்பு இன்று பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வு

 இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வில் 2135 பேர் பங்கேற்பு இன்று பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வு

தேனி: மாவட்டத்தில் நேற்று நடந்த இடைநிலை ஆசிரியர் தகுதித்தேர்வில் 2135 பேர் பங்கேற்றனர். இன்று 23 மையங்களில் பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வு நடக்கிறது. தமிழகத்தில் நேற்று இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கான தகுதித்தேர்வு நடந்தது. தேனி மாவட்டத்தில் 8 மையங்களில் 2479 பேர் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதில் 2135 பேர் தேர்வில் பங்கேற்றனர். 344 பேர் ஆப்சென்ட் ஆகினர். மாவட்டத்தில் உள்ள தேர்வு மையங்களை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள இடைநிலைக்கல்வி இணை இயக்குநர் அய்யணன் பார்வையிட்டார். சி.இ.ஓ., நாகேந்திரன், கல்வித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். இன்று பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வு நடக்கிறது. மாவட்டத்தில் 23 மையங்களில் 7607 பேர் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்விற்கு வருபவர்கள் அசல் அடையாள சான்று எடுத்து வர கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை