உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கேரளாவில் 2233 கி.மீ. தூரம் நிரந்தர விபத்து பகுதி; மூன்றில் இரு விபத்துக்கள் பகலில் நடக்கிறது

கேரளாவில் 2233 கி.மீ. தூரம் நிரந்தர விபத்து பகுதி; மூன்றில் இரு விபத்துக்கள் பகலில் நடக்கிறது

மூணாறு : கேரளாவில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் 323 ரோடுகளில் 2233 கி.மீ. தூரம் நிரந்தர விபத்து பகுதிகளாக ஆய்வில் தெரியவந்தது.கேரளாவில் போக்குவரத்து துறையினரின் பரிந்துரைபடி தேசிய போக்குவரத்து திட்டமிடல் மற்றும் ஆய்வு மையத்தினர் நிரந்தரமாக விபத்துகள் ஏற்படும் பகுதிகள் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்தனர்.மாநிலத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் 323 ரோடுகளில் 2233 கி.மீ. தூரம் நிரந்தர விபத்து பகுதிகளாகும். அதில் தேசிய நெடுஞ்சாலை 1089 கி.மீ.தூரம், மாநில நெடுஞ்சாலையில் 1144 கி.மீ. தூரமாகும். அவற்றில் கடந்த பத்து ஆண்டுகளாக விபத்துகள் அடிக்கடி நிகழும் 4592 பகுதிகள் கண்டறியப்பட்டன. விபத்தை தவிர்க்க ஒவ்வொரு பகுதியிலும் 5 முதல் 10 கி.மீ. தூரம் ரோடு சீரமைக்க வேண்டும். அது போன்று சீரமைப்பதற்கு தேசிய நெடுஞ்சாலையில் 149 பகுதிகள், மாநில நெடுஞ்சாலையில் 179 பகுதிகள் உள்ளன. மிகவும் கூடுதலாக திருச்சூர் மாவட்டத்தில் 37 பகுதிகள், கோழிக்கோடு 32, மலப்புரம் 32, திருவனந்தபுரம் 29 பகுதிகள் உள்ளன.பகலில் விபத்துகள், அதிகாலையில் பலி அதிகம்:போக்குவரத்து துறையினர் கணக்குபடி 100 விபத்துகளில் சராசரி 112 பேர் வீதம் பலத்த காயம் அடைந்து சராசரி 11 பேர் பலியாகின்றனர். மூன்றில் இரண்டு விபத்துகள் பகலில் நடக்கின்றன. நல்ல காலநிலையின்போது தான் 80 சதவீதம் விபத்துகள் நிகழ்கின்றன. அதற்கு அதி வேகம் காரணமாகும். மழை காலங்களில் 4 சதவீதம் விபத்துகள் மட்டும் நடக்கின்றன.மாலை 6:00 முதல் இரவு 9:00 மணி வரை கூடுதல் விபத்துகள் ஏற்படுகின்றன. மொத்த விபத்துகளில் 21 சதவீதம் பகல் 3:00 முதல் மாலை 6:00 மணி வரை நடக்கிறது. அதனையடுத்து கூடுதலாக காலை 9:00 முதல் மதியம் 12:00 மணி வரை 20 சதவீதமும், அதிகாலை 3:00 முதல் காலை 6:00 மணி வரை 19 சதவீதமும் விபத்துகள் நடக்கின்றன. அதிகாலை வேளையில் நடக்கும் விபத்துகளில் கூடுதல் பலியாகின்றனர்.ஒவ்வொரு ஆண்டும் ரோடு விபத்துகளின் சராசரி 4 ஆயிரம் பேர் பலியாகின்றனர். அதில் 50 சதவீதம் பேர் இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள். கார் விபத்தில் 18 சதவீதம், கால்நடை யாத்திரைகாரர்கள் 14 சதவீதம் பேர் பலியாகின்றனர். நாட்டில் நடக்கும் மொத்த ரோடு விபத்துகளில் 9.2 சதவீதம் கேரளாவில் நடக்கிறது. கேரள மாநிலம் ரோடு விபத்துகளில் நான்காம் இடத்தில் உள்ளது குறிப்பிடதக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை