உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மலைப்பாதையில் விபத்து 23 பயணியர் உயிர் தப்பினர்

மலைப்பாதையில் விபத்து 23 பயணியர் உயிர் தப்பினர்

கூடலுார்:குமுளி மலைப்பாதையில், நேற்று காலை தமிழக அரசு பஸ், பிரேக் பிடிக்காமல் தடுப்பு சுவரில் மோதி நின்றதால், 23 பயணியர் தப்பினர்.கேரள மாநிலம், குமுளியில் இருந்து திண்டுக்கல்லுக்கு, நேற்று காலை, 8:30 மணிக்கு தமிழக அரசு பஸ் புறப்பட்டது. டிரைவர் பாண்டிசுந்தரம் பஸ்சை ஓட்டினார். பஸ்சில் 23 பயணியர் இருந்தனர். குமுளி மலைப்பாதையில் உள்ள 4வது கி.மீ., மாதா கோவில் வளைவுக்கு முன் பஸ் பிரேக் பிடிக்காததால், ராட்சத பைப்புக்கு மேல் அமைக்கப்பட்ட பால கைப்பிடிச்சுவரில் மோதி பஸ் நின்றது. இதனால், 100 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து மிகப்பெரிய விபத்து ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. பஸ்சில் இருந்த பயணியர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பஸ் ரோட்டின் குறுக்கே நின்றதால், தமிழகம் - கேரளா இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மூன்று மணி நேரத்திற்குப் பின் பஸ் அகற்றப்பட்டு, போக்குவரத்து சீரானது.மற்றொரு அரசு பஸ் குமுளியில் பஸ் ஸ்டாண்டிற்கு திரும்பி வந்தபோது எதிரே சென்ற லாரி மீது மோதியதில், பஸ்சின் முன்பகுதி முழுதும் சேதமடைந்தது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை