உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  தேனி தலைமை தபால் நிலையத்தில்  24 மணி நேர தபால் சேவை துவக்கம்

 தேனி தலைமை தபால் நிலையத்தில்  24 மணி நேர தபால் சேவை துவக்கம்

தேனி: தேனி தலைமை தபால் நிலையத்தில் 24 மணி நேரமும் தபால் புக்கிங் சேவை வசதி நேற்று முதல் துவங்கப்பட்டது. இச் சேவையை துவக்கி வைத்து கோட்ட கண்காணிப்பாளர் குமரன் தெரிவித்ததாவது: மாவட்டத்தில் தேனி தலைமை தபால் நிலையத்தில் 24 மணி நேரம் இயங்கும் வகையில் தபால் சேவை துவக்கப்பட்டுள்ளது. ஞாயிறு உட்பட வாரத்தின் அனைத்து நாட்கள், அரசு விடுமுறை தினங்கள், பண்டிகை கால விடுமுறை தினங்கள் முழுவதும் இச்சேவை வழங்கப்படும். இதற்காக ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள். விரைவு தபால், பதிவு பார்சல் சேவை, பதிவுகள் அல்லாத தபால் சேவை உள்ளிட்டவை தொடர்ந்து வழங்கப்படும். இதனால் விரைவான சேவை பொது மக்களுக்கு வழங்கப்படும். இதற்கு முன் காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை சேவை இருந்தது. தற்போது 24 மணி நேர சேவை என்பதால் வணிகர்கள், சிறு, குறு வியாபாரிகள், பொதுமக்கள் இச் சேவையை பயன்படுத்தி கொள்ளலாம் என்றார். உதவி கண்காணிப்பு அலுவலர் கணபதி, தேனி தபால் நிலைய அலுவலர் அறிவழகன், வளர்ச்சி அலுவலர் செல்வக்குமார் உள்ளிட்ட தபால்துறை ஊழியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி