வீடு புகுந்து தாக்கிய 3 பேர் கைது
ஆண்டிபட்டி: டி.சுப்புலாபுரம் சவுந்தர்நகரை சேர்ந்தவர் தர்மர் 42, இவருக்கு திருமணமாகி முதல் மனைவி விவாகரத்தால் 2 வது திருமணம் செய்து முத்துச்செல்வம் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கேன்சர் பாதிப்பால் 2வது மனைவி இரு ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். இதன் பின்பு டி.அணைக்கரைப்பட்டியைச் சேர்ந்த ஸ்ரீதேவி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு மூன்றாவதாக ரகசிய திருமணம் செய்துகொண்டார். ஸ்ரீதேவியின் இரு ஆண், ஒரு பெண் பிள்ளைகளையும் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் தர்மருக்கும் ஸ்ரீதேவிக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு போலீஸ் ஸ்டேஷன் சென்றுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீதேவியின் மூத்த மகன் ராமு 22, தன்னுடன் சிலரை அழைத்துக் கொண்டு தர்மர் வீட்டில் நுழைந்து அவரை தாக்கி உள்ளனர். காயமடைந்த தர்மர் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தருமர் புகாரில் ஆண்டிபட்டி போலீசார் அணைக்கரைபட்டியை சேர்ந்த ராமகிருஷ்ணன் 22, கொண்டமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கபிலன் 21, யோவான் 22, ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.