உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பைபாஸ் ரோட்டில் ஆட்டோ மீது கார் மோதி 3 பேர் காயம்

பைபாஸ் ரோட்டில் ஆட்டோ மீது கார் மோதி 3 பேர் காயம்

பெரியகுளம்: திண்டுக்கல் குமுளி பைபாஸ் ரோடு, சருத்துப்பட்டி ஜல்லிபட்டி பிரிவில் ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 3 பேர் காயம் அடைந்தனர்.தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி மேலத்தெருவைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் மோகனசுந்தரலிங்கம் 31. இதேஊரைச் சேர்ந்த நாகு 65. மணிகண்டன் 51. ஆகியோர் உடல் பரிசோதனைக்கு தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, மோகனசுந்தரலிங்கம் ஆட்டோவில் அழைத்துச் சென்றார். ஜல்லிபட்டி சருத்துப்பட்டி பிரிவு அருகே செல்லும் போது, எதிரே வந்த கார் ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த நாகு, மணிகண்டன் மற்றும் டிரைவர் மோகன சுந்தரலிங்கம் காயமடைந்தனர். இவர்கள் ஆம்புலன்சில் பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டனர். விபத்து ஏற்படுத்திய உசிலம்பட்டி அருகே வ.உச்சப்பட்டியைச் சேர்ந்த கார் டிரைவர் ரகுவிடம் வடகரை போலீசார் விசாரிக்கின்றனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி