வாசகர்கள் கருத்துகள் ( 1 )
எப்படி ராஜஸ்தானில் இருந்து தமிழ் நாட்டைத்தாண்டி கேரளா சென்றது?
மேலும் செய்திகள்
ரூ.1.43 லட்சம் குட்கா கடத்திய டிரைவர் கைது
13-Oct-2025
கூடலுார்: கேரளாவுக்கு கடத்தப்பட்ட 340 கிலோ போதை புகையிலையை தேனி மாவட்டம் கூடலுாரில் பறிமுதல் செய்த போலீசார் ராஜஸ்தானைச் சேர்ந்த இருவரை கைது செய்தனர். கூடலுார் - கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.ஐ., கிருஷ்ணகுமார் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். கேரளாவுக்கு சென்ற காரை நிறுத்தி சோதனையிட்ட போது காரில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 340 கிலோ போதை புகையிலை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காரில் வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சோனா ராம் 25, பிஜலா 28, ஆகியோரை கைது செய்து, கார், போதை புகையிலையை பறிமுதல் செய்தனர்.விசாரணையில் இவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து புகையிலையை கடத்தி வந்து கேரளாவில் விற்பனை செய்ய கொண்டு செல்வது தெரிய வந்தது. புகையிலை யார் கொடுத்து அனுப்பியது, கேரளாவில் எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
எப்படி ராஜஸ்தானில் இருந்து தமிழ் நாட்டைத்தாண்டி கேரளா சென்றது?
13-Oct-2025