உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சுருளியாறு மின் நிலையத்தில் 35 மெகாவாட் உற்பத்தி

சுருளியாறு மின் நிலையத்தில் 35 மெகாவாட் உற்பத்தி

கம்பம்:தேனி மாவட்டம் ஹைவேவிஸ் பகுதியில் உள்ள அணைகள் பலத்த மழை காரணமாக நிரம்பி வருவதால் சுருளியாறு மின் நிலையத்தில் அதிகபட்ச அளவான 35 மெகாவாட் மின் உற்பத்தி நடந்து வருகிறது.சில வாரங்களாக மேகமலை பகுதியில் மழை பெய்து வருகிறது. மின்வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஹைவேவிஸ், வெண்ணியாறு, மணலாறு, இரவங்கலாறு அணைகள் நிரம்பி உள்ளன. தண்ணீர் நிரம்பி வழிவதால் சுருளியாறு மின் நிலையத்தில் அதிகபட்ச அளவான 35 மெகாவாட் மின் உற்பத்தியை அதிகாரிகள் துவக்கி உள்ளனர்.இதற்கு இரவங்கலாறு அணையில் இருந்து 941 மீட்டர் நீளம் உள்ள குழாய் வழியாக 140 கன அடி தண்ணீர், சுருளியாறு மின் நிலையத்திற்கு கொண்டு வரப்படுகிறது.லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின் நிலையத்தில் 35 மெகாவாட் உற்பத்திற்கு 400 கன அடி தண்ணீர் தேவைப்படும். ஆனால் இங்கு 140 கன அடி தண்ணீரிலேயே, 35 மெகாவாட் உற்பத்தி செய்ய முடியும். உயரமான இடத்தில் இருந்து தண்ணீர் இறக்கப்படுவதே இதற்குகாரணம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ