உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கடை உரிமையாளரை தாக்கிய 4 பேர் கைது

கடை உரிமையாளரை தாக்கிய 4 பேர் கைது

தேவதானப்பட்டி: பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் வடக்குத்தெருவைச் சேர்ந்தவர் முகமது முஸ்தபா 25. பஸ்ஸ்டாப் அருகே பேன்ஸி ஸ்டோர் நடத்தி வருகிறார். இதே ஊர் காந்திநகர் காலனியைச் சேர்ந்த ராஜபாண்டி 32. இவரது அண்ணன் முருகபாண்டி 35. நண்பர்கள் பாண்டியபிரபு 33. பசுபதி 31. ஆகியோர் பேன்ஸி ஸ்டோருக்குள் அத்துமீறி நுழைந்தனர். இதில் ராஜபாண்டி, முருகபாண்டி கடையில் செருப்புஎடுத்துவிட்டு பணம் தர மறுத்தனர். மற்றவர்கள் ஐஸ்கிரீமை எடுத்து சாப்பிட்டனர். எதற்கும் பணம் தர முடியாது என முகமது முஸ்தபாவை கட்டையால் அடித்து காயப்படுத்தினர். தடுக்க வந்த முகமது முஸ்தபா தாயார் பாத்திமாபீவிக்கும் அடி விழுந்தது. கடையில் பொருட்களை உடைத்து சேதப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்தனர். ஜெயமங்கலம் எஸ்.ஐ., முத்துபெருமாள், ராஜபாண்டி உட்பட 4 பேரையும் கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை