உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  விவசாயி கொலையில் 4 பேர் கைது

 விவசாயி கொலையில் 4 பேர் கைது

சின்னமனூர்: சின்னமனூர் விவசாயி வெட்டி கொலை செய்த வழக்கில் 3 பேர்கள் கைது செய்து மேலும் பலரை போலீசார் தீவிரம் தேடி வருகின்றனர். சின்னமனூர் ஜக்கம்மாள் கோயில் தெரு விவசாயி பால்பாண்டியன் 60. இவர் இங்குள்ள ஒரு சமுதாய தலைவராக இருந்துள்ளார். சமுதாயத்தில் இரண்டு கோஷ்டிகளாக பிரிந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். தகராறு 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துள்ளது. கடந்த நவ . 11ல் காலை 6:00 மணியளவில் சீலையம்பட்டி அருகே களத்தில் குவித்து இருந்த நெல்லை பார்க்க சென்ற பால்பாண்டியனை ஹெல்மெட் அணிந்து டூவீலரில் வந்த இருவர் வெட்டி கொலை செய்தனர். இந்த கொலை குறித்து போடி டி.எஸ்.பி. சுனில் தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். 12 க்கும் மேற்பட்டவர்களை பிடித்து விசாரித்தனர். அதில் ஜக்கம்மாள் கோயில் தெருவை சேர்ந்த மாரிச்சாமி 28, கார்த்திக் 27, சுரேஷ் 42, சாமிநாதன் 38 ஆகிய 4 பேர்களை நேற்று இரவு கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் பலர் சம்பந்தப்பட்டுள்ளனர் என்றும் அவர்களை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். கொலை நடந்த இரண்டே நாட்களில் உரியவர்களை கைது செய்த தனிப்படையினரை எஸ்.பி. ஸ்னேகாபிரியா பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி