மாமூல் கேட்ட 4 பேர் கைது
போடி: போடி தேவாரம் மெயின் ரோடு பாலாஜி நகரில் வசிப்பவர் புருஷோத்தமன் 36. இவர் சிலமலை அருகே சேட்காடு பகுதியில் சொந்த இடத்தில் அனுமதி பெற்று 4 ஆண்டுகளாக கல் குவாரி நடத்தி வருகிறார். கல் குவாரியில் இருந்து உடை கற்களை ஏற்றி சென்ற 2 டிப்பர் லாரிகளை முத்தையன் செட்டிபட்டியை சேர்ந்த மதன் 32., பிரதீப் 29, அருண்குமார் 32, விஜி 29, பிரதீஸ் ஆகிய 5 பேரும் சேர்ந்து வழி மறித்து உள்ளனர். அதன் பின் டிப்பர் லாரி டிரைவர்களை தகாத வார்த்தையால் பேசி அடித்துள்ளனர்.சம்பவ இடத்திற்கு குவாரி உரிமையாளர் புருஷோத்தமன், மேலாளர் மணி சென்றுள்ளனர். அப்போது அங்கு இருந்த பிரதிப், மதன் உட்பட 5 பேரும் சேர்ந்து புருேஷாத்தமனை தகாத வார்த்தையால் பேசி உள்ளனர். அதன்பின் அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்று கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.புருஷோத்தமன் புகாரில் மதன், பிரதீப், உட்பட 4 பேரையும் போடி தாலுாகா போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். தப்பி ஓடிய பிரதீசைதேடி வருகின்றனர்.