உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / காவிரி நதியின் 40 சதவீத நீர் மேற்குத்தொடர்ச்சி மலையின் சோலைக் காடுகளால் உருவாகிறது பயிற்சி முகாமில் மாவட்ட வன அலுவலர் பேச்சு

காவிரி நதியின் 40 சதவீத நீர் மேற்குத்தொடர்ச்சி மலையின் சோலைக் காடுகளால் உருவாகிறது பயிற்சி முகாமில் மாவட்ட வன அலுவலர் பேச்சு

தேனி:''வங்காள விரிகுடாவில் கலக்கும் காவிரி நதிநீரின் 40 சதவீத நீர் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள சோலைக்காடுகள், புல்வெளிகளால் கிடைக்கிறது என தேனி மாவட்ட வன அலுவலர் அருண்குமார் தெரிவித்தார்.தேனி மாவட்ட வனத்துறை சார்பில் 'வனமும் வாழ்வும் மாணவர் பயிற்சி' திட்டத்தில் 500 மாணவர்களுக்கு வனம் மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது.இதற்காக 25 முதுகலை அறிவியல், தாவரவியல் ஆசிரியர்கள் தேர்வு செய்து இவர்களுக்கான 2 நாட்கள் பயிற்சி மாவட்ட வன அலுவலகத்தில் துவங்கியது. பயிற்சியை துவக்கி வைத்து மாவட்ட வன அலுவலர் அருண்குமார் பேசியதாவது:தேனி மாவட்டம், மேற்குத்தொடர்ச்சி மலை சோலைக்காடுகள், புல்வெளிகாடுகளுடன் இணைந்துள்ளன. குரங்கனி, முதுவாக்குடி பகுதிகளில் அதிக உயரத்தில் உள்ளன. சோலைக்காடுகளில் உள்ள தாவரங்களின் வேர்கள் மண்ணை இறுக்கமாக பிடித்து வைத்திருப்பதால் மண் அரிப்பு தடுக்கப்படுகிறது. வெள்ளப்பெருக்கு தடுக்கப்படுகிறது.தேவையான நேரத்தில் நீரை வெளியிட்டு, நீரோடைகள் உருவாகி, சிற்றாறுகள் உருவாக காரணமாகின்றன. இந்த சோலைக்காடுகள் இருப்பதால் 10 ஆண்டுகளில் முன் எப்போதும் இல்லாத அளவில் மூலவைகையில் வெள்ளம் கரைபுரண்டோடும் நிலை உருவாகும்.அதுபோல் கர்நாடகாவின் குடகு மலையில் உருவாகி வங்காளவிரி குடாவில் கலக்கும் காவிரி நதியில் 40 சதவீதம் அளவு சோலைக்காடுகள் புல்வெளி காடுகளால் கிடைக்கிறது. உணவு சங்கிலி பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த அறிவியல் உண்மையை மாணவர்களிடம் கற்பிப்பது அவசியம் என்றார்.வனம், வனவிலங்கு பாதுகாப்பு குறித்து ஆண்டிபட்டி வனச்சரகர் அருள்குமாரும், தீத்தடுப்பு மேலாண்மை குறித்து போடி வனச்சரகர் நாகராஜனும், மனித வனவிலங்கு மோதல் குறித்து பெரியகுளம் வனச்சரகர் ஆதிரை, வனவிலங்குகள் கணக்கெடுப்பு பயிற்சியை சிறப்பு நிபுணர் சூரஜூம் விளக்கினர். வினாடி வினா போட்டியை மாவட்ட பசுமைத் தோழர் அப்சனா நடத்தி, பரிசுகளை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்