உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சிறப்பு திருத்தத்திற்கு 66.30 சதவீத வாக்காளர் படிவங்கள் வினியோகம்

சிறப்பு திருத்தத்திற்கு 66.30 சதவீத வாக்காளர் படிவங்கள் வினியோகம்

தேனி: தேனி மாவட்டத்தில் வாக்காளர்பட்டியல் சிறப்பு திருத்த பணிக்காக மாவட்டத்தில் 66.30 சதவீத படிவங்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் நவ.,4 முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக ஒவ்வொரு வாக்காளருக்கும் அவர்கள் புகைபடத்துடன் கூடிய இரு படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதனை பூர்த்தி செய்து வாக்காளர்கள் வழங்க வேண்டும். படிவங்கள் வினியோகிக்கும் பணியில் சுமார் 1220க்கும் மேற்பட்ட பி.எல்.ஓ.,க்கள் ஈடுபட்டுள்ளனர். சட்டசபை தொகுதி வாரியாக ஆண்டிபட்டி 1.95 லட்சம், பெரியகுளம்(தனி) 1.90 லட்சம், போடி 1.81லட்சம், கம்பம் 1.81 லட்சம் படிவங்கள் என மொத்தம் 7.49 லட்சம் படிவங்கள் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள 11.30 லட்சம் வாக்காளர்களில் 7.49 லட்சம் பேருக்கு வினியோகிக்கப்பட்டுள்ளது. அதாவது 66.30 சதவீதம் வினியோகம் செய்யப்பட்டுள்ளது என தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை