உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / செப்.ல் 768.8 மி.மீ., மழை

செப்.ல் 768.8 மி.மீ., மழை

தேனி: மாவட்டத்தில் கடந்த செப்டம்பரில் 768.8 மி.மீ., மழை பெய்துள்ளது. இது கடந்த ஆண்டு செப்., ஐ விட அதிகமாகும். மாவட்டத்தில் 13 இடங்களில் மழைமானி வைத்து மழை அளவு கணக்கிடப்படுகிறது. கடந்த மாதம் பெரியாறு அணையில் அதிகபட்சமாக 238 மி.மீ., மழை பெய்துள்ளது. தேக்கடி 107.4, சோத்துப்பாறை அணையில் 102.4 மி.மீ., பெய்துள்ளது. ஆண்டிபட்டி, அரண்மனைப்புதுார், வீரபாண்டி, கூடலுார், போடி, மஞ்சளாறு அணை, உத்தமபாளையம், வைகை அணை, வீரபாண்டி, சண்முகநதி அணை ஆகிய பகுதிகளில் 50 மி.மீ., குறைவாக மழை பதிவாகி உள்ளது. மொத்தத்தில் 768.8 மி.மீ., மழை பெய்துள்ளது. அதே சமயம் 2024 செப்.,ல் 537.4மி.மீ., 2023 செப்.,ல் 1544.2மி.மீ., மழை பதிவாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ