உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இடுக்கியில் 9 லட்சம் வாக்காளர்கள்

இடுக்கியில் 9 லட்சம் வாக்காளர்கள்

மூணாறு: இடுக்கியில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல்படி ஒன்பது லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் நெருங்குவதால் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கும் பணி நடந்த நிலையில், கடந்த ஜூலை இறுதியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்நிலையில் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கும் பணி நிறைவு பெற்று இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் நேற்று முன்தினம் வெளியிட்டது. அதன்படி இடுக்கி மாவட்டத்தில் 9,05,567 வாக்காளர் உள்ளனர். பட்டியலில் புதிதாக 1,02,393 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். 63,845 வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். 412 வாக்காளர்களின் தகவல்கள் திருத்தப்பட்டன. புதிய வாக்காளர் பட்டியல்படி ஆண்கள் 4,40,147, பெண்கள் 4,65,410, திருநங்கைகள் 10 என 9,05,567 வாக்காளர்கள் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை