உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரூ.2.5 கோடி மதிப்பிலான கட்டடம் மாட்டு கொட்டகையான அவலம்

ரூ.2.5 கோடி மதிப்பிலான கட்டடம் மாட்டு கொட்டகையான அவலம்

மூணாறு; மூணாறில் ரூ.2.5 கோடி செலவில் கட்டப்பட்ட தொழிலாளர் நலத்துறை அலுவலக கட்டடம் மாட்டு கொட்டகையாக மாறிய அவலம் ஏற்பட்டுள்ளது.மூணாறில், பழைய மூணாறு பகுதியில் துணை, உதவி தொழிலாளர் நலத்துறை அதிகாரி அலுவலகங்கள், தோட்ட ஆய்வாளர் அலுவலகம் ஆகியவை பழைமையான வாடகை கட்டடங்களில் செயல்பட்டு வருகின்றன. அவற்றை ஒரே கட்டடத்தில் கொண்டு வரும் நிலையில் மூணாறில் காலனி பகுதியில் ரூ.2.5 கோடி செலவில் புதிய கட்டடம் கட்டப்பட்டது. அதனை 2024 அக்.21ல் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சிவன்குட்டி திறந்து வைத்தார். அந்த அலுவலகங்கள் தொழிலாளர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என எதிர்பாக்கப்பட்டது.ஆனால் திறப்பு விழா முடிந்து எட்டு மாதங்கள் ஆகியும் அலுவலகங்கள் பயன்பாட்டுக்கு வராத நிலையில், பழைய மூணாறு பகுதியில் அலுவலகங்கள் வழக்கமாக செயல்பட்டு வருகிறது. குடிநீர் தட்டுப்பாடு, கட்டுமானத்தில் ஏற்பட்ட குளறுபடி உட்பட பல்வேறு காரணங்களால் புதிய கட்டடத்திற்கு அலுவலகங்களை மாற்றுவதற்கு அதிகாரிகள் தயாரில்லை என தெரியவந்தது.கட்டடம் பயன்பாட்டிற்கு வராததால், அதன் வராண்டாவில் மாடுகள் தஞ்சம் அடைகின்றன. அதனால் ரூ.2.5 கோடி செலவில் கட்டப்பட்ட கட்டடம் மாட்டு கொட்டகையாக மாறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை