உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மூதாட்டி வீட்டு குடிநீர் குழாய் துண்டிப்பு பேரூராட்சித் தலைவர் உட்பட மூவர்மீது வழக்கு

மூதாட்டி வீட்டு குடிநீர் குழாய் துண்டிப்பு பேரூராட்சித் தலைவர் உட்பட மூவர்மீது வழக்கு

தேனி: பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் முன்பகையால் மூதாட்டி வீட்டு குடிநீர் இணைப்பை துண்டித்ததாக பேரூராட்சி ஊழியர்கள், பேரூராட்சி தலைவர் உட்பட மூவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.பழனிசெட்டிபட்டி டி.பி.என்., ரோட்டில் வசிக்கும் மூதாட்டி சீனியம்மாள் 79. இவர் பழனிச்செட்டிபட்டி போலீசில் அளித்த புகாரில், எனக்கு சந்திரசேகர், ஞானசேகர் மகன்கள் உள்ளனர். கணவர் இறந்த பின் மகன் சந்திரசேகர் மிதுன் சக்கரவர்த்தியுடன் சேர்ந்து, சொத்தை பாகப்பிரிவினை செய்ய விடாமல் தொல்லை கொடுத்தார். மனநலம் பாதித்த மகன் ஞானசேகர், பேரன் தங்கபாண்டி பாதுகாப்பில் வசிக்கிறேன். மிதுன்சக்கரவர்த்திக்கும்,எனக்கும் உள்ள முன் பகையால் பழனிசெட்டிபட்டி பேரூராட்சித் தலைவர் பதவியை பயன்படுத்தி எனது வீட்டு குடிநீர் இணைப்பை துண்டிக்க நோட்டீஸ் அனுப்பினார். பேரூராட்சியில் விளக்க கடிதம் நேரடியாகவும், தபாலில் அனுப்பினோம்.பேரூராட்சித் தலைவர் மிதுன்சக்கரவர்த்தி அடிக்கடி எனக்கும், எனது பேரனுக்கும் தொல்லை கொடுத்தார். செப்.16ல் முன் அறிவிப்பு இன்றி பேரூராட்சி ஊழியர்கள் பாலமுருகன், மணிகண்டன் வந்து குடிநீர் குழாயை தோண்டினர். இது பற்றி கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்து குழாய் இணைப்பை துண்டித்தனர். எனவே மூவர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரியிருந்தார். புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி எஸ்.ஐ., மலரம்மாள் பேரூராட்சித் தலைவர் மிதுன்சக்கரவர்த்தி, ஊழியர்கள் பாலமுருகன், மணிகண்டன் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கிறார்.பேரூராட்சி செயல் அலுவலர் ஜெஸி ரோஸ்லின் அன்பு ராணி கூறுகையில், 'சீனியம்மாள் அங்கீகாரமின்றி குழாய் இணைப்பை பயன்படுத்தி அதற்கு கட்டணம் செலுத்தாமல் இருந்தது தெரியவந்தது. அதனால் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது' என்றார்.இதே கோரிக்கையை வலியுறுத்தி மூதாட்டி சீனியம்மாள் மகன் ஞானசேகர், பேரன் தங்கபாண்டியுடன் கலெக்டர், எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை