உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மினி மாட்டு வண்டியில் பயணித்த விவசாயி

மினி மாட்டு வண்டியில் பயணித்த விவசாயி

ஆண்டிபட்டி: வாகன போக்குவரத்து அதிகரித்த நிலையில் மினி வண்டியில் வளரும் இளம் காளைகளை பூட்டி இழுக்கச் செய்து குடும்ப உறுப்பினர்களுடன் விவசாயி ரோட்டில் பயணித்தது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.ஆண்டிபட்டி அருகே பந்துவார்பட்டி விவசாயி ஒருவர் டயர் சக்கரத்துடன் கூடிய மினிமாட்டு வண்டியில் குடும்பத்துடன் க.விலக்கு - வருஷநாடு ரோட்டில் சென்றார். வளரும் இளம் காளைகள் இழுக்கும்படி வடிவமைக்கப்பட்ட மினி வண்டியை சிறுவன் ஓட்டிச்சென்றான். அருகில் தந்தை, உறவினர்கள் அமர்ந்து மகிழ்வுடன் பயணித்தனர். வளரும் இளம் காளைகளை வண்டி இழுப்பதற்கு பயிற்சியில் ஈடுபடுத்தி வருவதாகவும், அதற்கு தக்கபடி வண்டி வடிவமைத்து உள்ளேன் என, தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்