மேலும் செய்திகள்
பங்குனி உத்திர தேர்த்திருவிழா கொடியேற்றம்
03-Apr-2025
--பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திர தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர்.பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா ஏப்.2ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாட்கள் நடக்கும் விழாவில் தினமும் இரவு பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடந்து வருகிறது. முக்கிய திருவிழாவான 9ம் நாள் திருவிழாவான நேற்று மாலை தேரோட்டம் நடந்தது. வீச்சு கருப்பணசாமி கோயில் எதிர்புறம் தேர்நிலையிலிருந்து முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., சரவணக்குமார் எம்.எல்.ஏ., நகராட்சி தலைவர் சுமிதா, கமிஷனர் தமிஹா சுல்தானா, செயல்அலுவலர் சுந்தரி, திருப்பணிகுழுவினர்கள் சசிதரன், சிதம்பரசூரியவேலு ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். அலங்கரிக்கப்பட்ட தேரில் சோமாஸ்கந்தர் (ராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி, பாலசுப்பிரமணியர்)வீற்றிருந்தனர். தேர், வி.நி.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ரோடு வழியாக திருவள்ளுவர் சிலை, கீழரதவீதி, தெற்குரதவீதி வழியாக பக்தர்கள் தேரை இழுத்து சென்றனர். பக்தர்கள் வெள்ளத்தில் தேர் ஆடி அசைந்தபடி நிலையை வந்தடைந்தது. தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.-
03-Apr-2025