உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / 127 கிலோ புகையிலை பதுக்கியவர் கைது

127 கிலோ புகையிலை பதுக்கியவர் கைது

பெரியகுளம் : பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி ராமர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுப்ரமணி 54. வீட்டருகே மளிகை கடை நடத்தி வந்தார். இவர் கடையில் மூடை, மூடையாக போதை புகையிலை விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதாக தென்கரை போலீசாருக்கு தகவல் சென்றது. போலீசார் உஷாராகினர். தென்கரை எஸ்.ஐ., ஜீவானந்தம் தலைமையில் போலீசார் சுப்பிரமணி கடையில் சோதனையிட்டனர். இதில் ரூ.1.70 லட்சம் மதிப்பிலான 127.770 கிலோ எடை கொண்ட 3 மூடை போதை புகையிலையை போலீசார் கைப்பற்றினர். சுப்பிரமணி கைது செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ