உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெரியாறு அணையிலிருந்து எடுக்கும் தண்ணீரை குறைக்க வலிறுத்தல் விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்

பெரியாறு அணையிலிருந்து எடுக்கும் தண்ணீரை குறைக்க வலிறுத்தல் விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்

உத்தமபாளையம்: முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வெளியேற்றும் தண்ணீரின் அளவை குறைக்க விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் சங்க கூட்டம் உத்தமபாளையத்தில் நேற்று தலைவர் தர்வேஷ் முகைதீன் தலைமையில் நடந்தது. செயலாளர் சகுபர் அலி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிருக்கு மார்ச் 31 வரை தண்ணீர் தேவை உள்ளது. மேலும் ஜூன் முதல் தேதி மீண்டும் தண்ணீர் திறக்க வேண்டும். அணைப்பகுதியில் மழை இல்லை. கோடை காலமாக இருப்பதால் குடிநீர் - தேவை, திருவிழா கால தண்ணீர் தேவை போன்றவற்றை கருத்தில் கொண்டு, அணையில் இருந்து வெளியேற்றும் தண்ணீரின் அளவை குறைக்க வேண்டும்.வேளாண் விளை பொருள்களுக்கு கட்டுபடியான விலை கிடைக்கவும், டில்லியில் போராடும் விவசாயிகளின் போராட்டம் வெற்றி பெறவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் கருங்கட்டான்குள தலைவர் விஜயராஜன், கம்பம் தலைவர் நாராயணன் , ராயப்பன்பட்டி தலைவர் பிரபாகர், சின்னமனூர் தலைவர் ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

veeramani
பிப் 18, 2024 10:29

பெரியாறு தண்ணீர் வைகை அணைக்கு வருகிறதா? வரும் வழியில் டீசல் பூம்பிகளினால் உரிங்கப்பட்டு திராட்சை தோட்டங்களுக்கு மட்டும் செல்கிறது. முதலில் இதை நிறுத்துங்கள். பின்னர் தண்ணீர் திறப்பது பற்றி பேசலாம். வீரபாண்டி திருவிழாகூட மக்களை வேண்டுகோள் விடுத்தபின்னர்தான் தண்ணீர் வருகிறது.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை