உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பிளஸ் 2 மாணவருக்கு அரசு வேலைவாங்கி தருவதாக 10 லட்சம் மோசடி

பிளஸ் 2 மாணவருக்கு அரசு வேலைவாங்கி தருவதாக 10 லட்சம் மோசடி

தேனி,:தேனியில் பிளஸ் 2 படித்த மாணவருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்த வழக்கில் இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.தேனி டிராவலர்ஸ் பங்களா மேற்குத் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் 24. இவரது மூத்த மகன் நிஷோக் பள்ளிப்படிப்பை முடித்து மேல் படிப்பிற்கு கல்லுாரியில் சேர இருந்தார். இந்நிலையில் தேனி ராஜா லைனைச் சேர்ந்த பொன்சிவா, ஆண்டிபட்டியைச் சேர்ந்த மகேஸ்வரனை ஆறுமுகத்திடம் அறிமுகம் செய்தார்.அவர் ஆறுமுகத்தின் மகன் நிஷோக்கை மேற்படிப்பு படிக்க வேண்டாம். அவருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறினார். அதை நம்பிய ஆறுமுகம் 2019 செப்., இரு தவணைகளாக ரூ.6 லட்சம் வழங்கினார். பின் மகேஸ்வரன் அரசு அதிகாரி போல் ஆறுமுகத்திடம் பேசி ரூ.4 லட்சம் பெற்றுு 15 நாட்களுக்குள் வேலைக்கான ஆர்டர் பெற்றுத் தருவதாக கூறினார். அதன் பின் ஆர்டர் பெற்றுத்தராமல் நீண்ட நாட்கள் ஏமாற்றினார். ஆறுமுகம் 2024 டிச.,26ல் ஒரு பத்திரத்தில் 2025 மே 5ல் பணத்தை கொடுத்து விடுவதாக எழுதிக் கொடுத்தார். பின் பணத்தையும் வழங்கவில்லை. ஆறுமுகம் எஸ்.பி., சிவபிரசாத்திடம் புகார் அளித்தார். பொன்சிவா, மகேஸ்வரன் மீது போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை