உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / காட்டுயானையிடம் உயிர் தப்ப ஓடிய பெண் கீழே விழுந்து காயம்

காட்டுயானையிடம் உயிர் தப்ப ஓடிய பெண் கீழே விழுந்து காயம்

மூணாறு: இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் அருகே பி.எல். ராம் பகுதியில் காட்டு யானையிடம் இருந்து உயிர் தப்ப ஓடிய போது கீழே விழுந்து பால்தாய் 42, பலத்த காயமடைந்தார்.அப்பகுதியில் கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக சக்கை கொம்பன் (பலாக் கொம்பன்) எனும் ஆண் காட்டு யானை நாடமாடி வருகிறது. இரவில் பி.எல். ராம், சூரிய நல்லி, போடிமெட்டு ரோடுகளில் வலம் வரும் சக்கை கொம்பன் பகலில் காடுகளில் தஞ்சமடையும்.இந்நிலையில் பி.எல். ராம் பகுதியில் வசிக்கும் பால்தாய் நேற்று காலை அருகில் வசிக்கும் வேறொரு பெண்ணுடன் பால் வாங்குவதற்கு கடைக்குச் சென்றார். அப்போது அங்கு எதிர்பாராத வகையில் வந்த யானையை பார்த்து இருவரும் அச்சமடைந்தனர். அதனிடம் இருந்து உயிர் தப்ப எண்ணி இருவரும் ஓடியபோது பால்தாய் ஓடைக்குள் விழுந்தார். இருவருடைய அலறல் சப்தம் கேட்டு வந்த பொதுமக்கள் பலமாக கூச்சலிட்டு யானையை விரட்டினர். அதன்பிறகு ஓடைக்குள் விழுந்து பலத்த காயமடைந்த பால்தாயை மீட்டு தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ