மேலும் செய்திகள்
டூவீலர் விபத்து: வாலிபர் பலி
18-Mar-2025
கம்பம்:பைக்கில் நண்பருடன் பைக்கில் சென்றபோது, கட்டுவிரியன் பாம்பு கடித்து வாலிபர் பலியானார்.தேனி மாவட்டம், சுருளிப்பட்டி பழைய ரைஸ்மில் தெருவைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது இளைய மகன் ஹரிகிருஷ்ணன், 21; எலக்ட்ரீஷியன். இவர், ஏப்., 2ல் நண்பர் ராம்குமாருடன் பைக்கில் சென்றார். ராம்குமார் பைக்கை ஓட்ட, ஹரிகிருஷ்ணன் அமர்ந்து சென்றார். அப்போது, பைக்கின் முன்பகுதியில் இருந்து கட்டுவிரியன் பாம்பு வெளியே வந்தது. பாம்பைக் கண்டதும் ராம்குமார், இரு கைகளையும் ஹேண்ட் பாரிலிருந்து எடுத்து உதறினார்.ஹரிகிருஷ்ணன் பைக்கை பிரேக் பிடித்து நிறுத்த, ஹேண்ட் பாரை பிடித்தபோது, அவரது வலது கையில் பாம்பு கடித்தது. உடனே பைக்கை நிறுத்தி, இருவரும் பாம்பை அடித்துக் கொன்றனர்.கம்பம் அரசு மருத்துவமனைக்கு பாம்பை துாக்கிச் சென்றபோது, அங்கிருந்த டாக்டர்கள், ஹரிகிருஷ்ணனை தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஹரிகிருஷ்ணன் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். ராயப்பன்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
18-Mar-2025