உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போக்குவரத்திற்கு இடையூறான மின்கம்பியால் விபத்து அபாயம்

போக்குவரத்திற்கு இடையூறான மின்கம்பியால் விபத்து அபாயம்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம் பழையகோட்டை ஊராட்சி நாகலாறு ஓடையில் கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தின் குறுக்கே உயர் மின் அழுத்த கம்பிகள் செல்வதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் பாலத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உயரழுத்த மின் கம்பிகளை மாற்றி அமைத்து பாலத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர பொது மக்கள் சார்பில் பா.ஜ., முன்னாள் ஒன்றிய தலைவர் ராஜா தேனி கலெக்டர் ரஞ்ஜீத்சிங்கிடம் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நாகலாறு ஓடையின் குறுக்கே நபார்டு நிதி உதவி திட்டத்தில் ரூ.1.53 கோடி மதிப்பில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தின் குறுக்கே தாழ்வான நிலையில் உயர் அழுத்த மின் கம்பி செல்கிறது. இதனால் இந்த பாலத்தின் வழியாக பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல முடியவில்லை. பாலத்தின் வழியாக டவுன் பஸ் சென்று வராததால் விவசாயிகள், பள்ளி மாணவர்கள் சிரமப்படுகின்றனர். உயர் அழுத்த மின் கம்பிகளை மாற்றியமைத்து பாலத்தின் வழியாக வாகன போக்குவரத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி