உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கல்வியில் சாதனை: பரிசளிப்பு விழா

கல்வியில் சாதனை: பரிசளிப்பு விழா

கூடலுார், : கல்வி, கல்விசார் செயல்பாடுகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒக்கலிகர் இளைஞர் அணி, நல அறக்கட்டளை சார்பில் பரிசு வழங்கப்பட்டது.கூடலுார் ஒக்கலிகர் இளைஞர் அணியின் 11ம் ஆண்டு விழாவை முன்னிட்டு கல்வி, கல்விசார் செயல்பாடுகளில் சாதனை படைத்தவர்களுக்கு நினைவு பரிசு வழங்கும் விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன. ஒக்கலிகர் மகாஜன சங்கத் தலைவர் ராம்பா தலைமை வகித்தார். செயலாளர் அருண்குமார், பொருளாளர் சரவணன் முன்னிலை வகித்தனர். கல்வியில் சாதனை மற்றும் சுய ஒழுக்கம் குறித்து ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரி தமிழ் பேராசிரியை தமிழ்ச்செல்வி, ஓய்வு பெற்ற கால்நடைத் துறை கூடுதல் இயக்குனர் மகேந்திரன் பேசினர். நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி